search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கோட்டை எஸ்ஐ"

    சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவித் தொகையைத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பது ஆறுதல் அளிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், திருடர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட செய்தி, அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கின்றது.

    நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவர். இரவுக் காவல் பணியில் இருந்தபோது, ஆடு திருடிச் சென்றவர்களைப் பின் தொடர்ந்து, 15 கிலோமீட்டர் தொலைவு விரட்டிச் சென்றார் என்பது, அவரது துணிச்சலையும், கடமை உணர்வையும் காட்டுகின்றது.

    புதுக்கோட்டை எஸ்ஐ

    அவரது உடல், உரிய சிறப்புகளுடன் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவித் தொகையைத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பது ஆறுதல் அளிக்கின்றது. குற்றத் தொடர்பு உடைய 4 பேர்களைக் காவல் துறையினர் பிடித்து இருக்கின்றார்கள். வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என்ற நிதியமைச்சர் அறிவிப்பு வேதனை அளிக்கிறது: ஓ.பி.எஸ்.

    புதுக்கோட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    புதுக்கோட்டை அருகே கீரனூரில் ஆடு திருடியவர்களை துரத்திச் சென்று பிடிக்க முற்பட்ட போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து போலீசார்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

    புதுக்கோட்டை எஸ்ஐ

    இந்த நிலையில், சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் மேலும் கூறுகையில், “ரோந்து பணியில் இருக்கும் போது எஸ்.ஐ மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரம் அடைந்தேன். பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

    புதுக்கோட்டையில் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடும் திருடும் கும்பல் ஒன்றினை விரட்டிச் சென்ற போது அக்கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இச்சம்பவத்திற்கு கண்டம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ''நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் தான் நம்முடைய காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்றுகிறார்கள். பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் எதுவும் கிடையாது, இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக வர வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது.

    புதுக்கோட்டை எஸ்ஐ
     
    மாநில அரசு கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்'' என்று அவர் கூறியுள்ளார். 

    ×